உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சோளிங்கரில் கார்த்திகை ஞாயிறு உற்சவம்

சோளிங்கரில் கார்த்திகை ஞாயிறு உற்சவம்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.யோக நிலையில் உள்ள நரசிம்ம சுவாமி, கார்த்திகையில் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். இதனால், கார்த்திகை மாதம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு மணிக்கிணக்கில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அதிகாலை 4:00 மணி முதலே பக்தர்கள் மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தனர். படி வழியாகவும், ரோப்கார் வாயிலாகவும் நேற்று, 10,000க்கும் மேற்பட்டோர் சுவாமியை தரிசித்தனர்.யோக நரசிம்மரின் உற்சவரான பக்தோசித பெருமாள் அருள்பாலிக்கும் சோளிங்கர் பெருமாள் கோவிலில், இன்று, திங்கட்கிழமை முதல், வரும் ஜன., 14ம் தேதி வரை, தினசரி அதிகாலை 4:00 மணிக்கு தனுர் மாத உற்சவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை