உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ரேஷன் கடை கட்டடம் சேதம்

ரேஷன் கடை கட்டடம் சேதம்

நெமிலி,:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், அசநெல்லிகுப்பம் கிராமத்தில், ரேஷன் கடை இயங்கிவருகிறது. இந்த ரேஷன் கடையில், அசநெல்லிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த,200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள்அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த ரேஷன் கடை கூரை சேதமடைந்து, மழைக்காலத்தில் கட்டத்திற்குள் தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால், ரேஷன் கடையில் உள்ள பொருட்களை பாதுகாப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், ஈரப்பதத்துடன் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த ரேஷன் கடை கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ