சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லஞ்சம் பறிமுதல்
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.அதன்படி, நேற்று மாலை ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, மாலை 4.30 மணிக்கு சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்தனர்.அப்போது, அலுவலகத்தின் மின் அறை, பதிவு அறை, அலமாரி மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்து, 1 லட்சத்து 5 ஆயிரத்து 210 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.