உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / டூ-- வீலர்கள் மோதி விபத்து நெமிலி அருகே மூவர் பலி

டூ-- வீலர்கள் மோதி விபத்து நெமிலி அருகே மூவர் பலி

நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 23. இவரது நண்பர் பிரேம், 24.இருவரும் ஸ்பிளன்டர் இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, சேந்தமங்கலத்தில் இருந்து நெமிலி நோக்கி சென்றனர்.ஆலப்பாக்கம் சாலை வளைவில் வந்தபோது, எதிரே ஆட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 21, அவரது நண்பர் ரஞ்சித், 21, ஆகியோர் ஓட்டி வந்த கே.டி.எம்., இருசக்கர வாகனம் மோதியது. பைக்கில் சென்ற அனைவரும் 'ஹெல்மெட்' அணியவில்லை.இதில், வெற்றிச்செல்வன், பிரேம், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.தகவலறிந்த நெமிலி போலீசார், மூவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.பலத்த காயமடைந்த ரஞ்சித்தை, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ