உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மின் இணைப்பு மாற்ற லஞ்சம் அதிகாரிகள் மூவர் அதிரடி கைது

மின் இணைப்பு மாற்ற லஞ்சம் அதிகாரிகள் மூவர் அதிரடி கைது

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனுாரை சேர்ந்தவர் சரவணன், 40. இவர் ஹோட்டல் நடத்த, வீட்டு மின் இணைப்பை, வணிக மின் இணைப்பாக மாற்றக்கோரி, அரக்கோணம், வின்டர்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.உதவி செயற்பொறியாளர் புனிதா, 50, வணிக ஆய்வாளர் மோனிகா, போர்மேன் பல்கிஸ் பேகம் ஆகியோர், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். முதல் கட்டமாக, 50,000 ரூபாயை சில நாட்களுக்கு முன் சரவணன் கொடுத்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, இரண்டாம் கட்டமாக, 25,000 ரூபாயை உதவி செயற்பொறியாளர் புனிதாவிடம், சரவணன் வழங்கினார்.அவர், வணிக ஆய்வாளர் மோனிகாவிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினார். மோனிகா பணத்தை பெற்று, போர்மேன் பல்கிஸ் பேகத்திடம் வழங்கினார்.இதைப்பார்த்த, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், புனிதா, மோனிகா, பல்கிஸ் பேகம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ