உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / என்னப்பன் அல்லவா... என் தாயும் அல்லவா...சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை: இரவு முழுதும் விழித்து பக்தர்கள் வழிபாடு

என்னப்பன் அல்லவா... என் தாயும் அல்லவா...சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை: இரவு முழுதும் விழித்து பக்தர்கள் வழிபாடு

என்னப்பன் அல்லவா... என் தாயும் அல்லவா...சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை: இரவு முழுதும் விழித்து பக்தர்கள் வழிபாடுசேலம்:சிவ பெருமானுக்கு உகந்த நாளான மாசி அமாவாசை முதல் நாளில் வரக்கூடிய ராத்திரி மகா சிவராத்திரி எனப்படும். அந்த நாளில் சிவாலயங்களில் குறிப்பாக இரவில் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் கண்விழித்து விரதம் மேற்கொண்டால், சகல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வைபவம் நேற்று நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து, 2, 3, 4ம் கால பூஜை நடந்தது. இதை ஒட்டி திருவள்ளுவர் சிலை வரை கூட்டம் நின்றது. வரிசையில் காத்திருந்து விடிய விடிய தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல் அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், இரவு, 9:00 மணிக்கு முதல் கால பூஜை, சிறப்பு அபி ேஷகம் செய்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து, 2, 3, 4ம் கால பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், விடிய விடிய தரிசனம் செய்தனர். 2ம் அக்ராஹாரம் காசி விஸ்வநாதர் உள்பட, மாநகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிவராத்திரி பூஜை நடந்தது.உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் முதல் கால பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, 2, 3, 4ம் கால பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஓமலுார் செவ்வாய் சந்தை அருகே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நேற்று இரவு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. உற்சவருக்கு பல்வேறு திரவிங்களால் அபிேஷக பூஜை நடந்தது. அமரகுந்தி மீனாட்சி அம்மன் கோவிலில் சொற்பொழிவு, பரதநாட்டியம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேட்டூர், இந்திராநகர் ஜலகண்டேஸ்வரர் குடிலில், 4 கால பூஜை, சிறப்பு அபி ேஷகம், ஆராதனை, அன்னதானம் நடந்தது. கருமலைக்கூடல் அடுத்த கோம்புரான்காடு காடேஸ்வரர், ராமன் நகர் அடுத்த திப்பம்பட்டி கோடீலிங்கேஸ்வரர் கோவிலில் பூஜை நடந்தது. மேச்சேரி பசுபதீஸ்வரர், கைலாசநாதர், அமரம் ஈஸ்வரன், கொளத்துார், அச்சங்காடு நெல்லீஸ்வரர், சோறுடையீஸ்வரர் ஆலயம், நிலுவைக்கல்புதுார் சிவாலயம், பாலவாடி சித்தேஸ்வரர், ஜலகண்டேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், 4 கால பூஜை, அபிேஷகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், விடிய, விடிய வழிபட்டனர்.ஆத்துார் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ஆறு கால பூஜை நேற்று தொடங்கியது. மாலை, 6:00 மணிக்கு தேவகண பூஜை; இரவு, 8:00 மணிக்கு பூதகணம், 10:00 மணிக்கு ராட்சஷ கணம்; நள்ளிரவு, 12:00 மணிக்கு, மனித கண பூஜை நடந்தது. இதையடுத்து அதிகாலை, 2:00 மணிக்கு சித்தர்கள் கணம்; 4:00 மணிக்கு ஆதிபராசக்தி என, 6 கால பூஜையும் தொடர்ந்தது. 3ம் கால பூஜையின்போது சொர்ணபுரீஸ்வரர் பெருமாள் அவதாரத்திலும், 4ம் கால பூஜையில் அர்த்தநாரீஸ்வரர், 5, 6ம் கால பூஜையில் அண்ணாமலையார் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஆத்துார் கைலாசநாதர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வெள்ளை விநாயகர் கோவிலில் மகாலிங்கேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், வீரகனுார் கங்கா சவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், 4 கால பூஜையுடன் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை