உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., - டவுன் பஞ்., தலைவியை கண்டித்து வாயில் துணி கட்டி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்

தி.மு.க., - டவுன் பஞ்., தலைவியை கண்டித்து வாயில் துணி கட்டி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்

தி.மு.க., - டவுன் பஞ்., தலைவியை கண்டித்து வாயில் துணி கட்டி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்ஆத்துார்,: தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவி, அவரது கணவரை கண்டித்து, தி.மு.க., - காங்., கவுன்சிலர்களே, வாயில் கறுப்பு துணி கட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. அதில், தி.மு.க.,வில், 13, காங்., 2, அ.தி.மு.க.,வில், 3 கவுன்சிலர்கள் உள்ளனர். நேற்று காலை, 10:00 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, துணைத்தலைவர் சந்தியா தலைமையில், அக்கட்சியன், 7 கவுன்சிலர், காங்., கட்சியின், 2 கவுன்சிலர்கள், தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், வாயில் கறுப்பு துணி கட்டி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு வைத்திருந்த பேனரில், 'தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவி கவிதா, அவரது கணவரான, 4வது வார்டு கவுன்சிலர் ராஜா, தகாத வார்த்தையில் பேசுவதோடு, தன்னிச்சையாக செயல்படுகின்றனர். தி.மு.க., கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏற்பதில்லை. 'பினாமி' பெயரில், கடை வாடகை, டெண்டர் எடுத்து வருகின்றனர். இவர்கள் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை' என, கூறப்பட்டுள்ளது.மாலை, 5:00 மணிக்கு, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சுலைமான்சேட்டு பேச்சு நடத்தினார். அப்போது, 'உங்கள் புகார் குறித்து விசாரிக்கப்படும். உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது' என்றார். பின், 5:30 மணிக்கு, கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை