உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் உழவாரப்பணி நிதியில் முறைகேடு?புது அறங்காவலர் குழு தலைவர் குற்றச்சாட்டு

கோவில் உழவாரப்பணி நிதியில் முறைகேடு?புது அறங்காவலர் குழு தலைவர் குற்றச்சாட்டு

கோவில் உழவாரப்பணி நிதியில் முறைகேடு?புது அறங்காவலர் குழு தலைவர் குற்றச்சாட்டுசேலம், : சேலம், குமரகிரி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டு, பதவியேற்பு விழா நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா முன்னிலை வகித்தார். தி.மு.க.,வின், கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார். தலைவராக ஆறுமுகம், அறங்காவலர்களாக சந்திரா, தனபால், அம்மாசி, ராஜமாணிக்கம் பொறுப்பேற்றுக்கொண்டனர். செயல் அலுவலர் விமலா, தி.மு.க.,வின், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: கடந்த, 10 ஆண்டுக்கு முன் கோவில் திருப்பணி தொடங்கப்பட்டது. அதனால் உற்சவர் சுவாமிகள், அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. பின், அ.தி.மு.க., சார்பில் வென்ற, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு வந்தும், திருப்பணி பாதியில் நின்றுவிட்டது. திருப்பணிக்கு வசூலித்த தொகை, செலவு செய்தது போக, மீதி பணம் குறித்து எந்த கணக்கும் இல்லை. நிதியில்லை என காரணம் கூறி, திருப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. கோவில் உழவாரப்பணி நிதியை கொண்டு நடத்திய ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்கும் பணம் தராமல் முறைகேடு செய்துள்ளனர். என் தலைமையில் குழு, 6 மாதத்தில் கும்பாபிேஷகம் நடத்த, களமிறங்கி உள்ளோம். 90 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ