நுரையீரல் ரத்தக்குழாய் அடைபட்ட பெண்கள் நலம்அரசு மருத்துவர்களுக்கு டீன் பாராட்டு
நுரையீரல் ரத்தக்குழாய் அடைபட்ட பெண்கள் நலம்அரசு மருத்துவர்களுக்கு டீன் பாராட்டுசேலம் :நுரையீரல் ரத்தக்குழாய் அடைக்கப்பட்ட இரு பெண்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தியதால், சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்களை, டீன் பாராட்டினார்.இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் தேவி மீனாள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் சுமதி, 40. நுரையீரல் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, வலது காலில், 'ஹெமாஞ்சியோமா' எனும், அதீத ரத்த குழாய் வளர்ச்சி மற்றும் இரு கால்களிலும் ரத்தம் உறைதலால் பாதிக்கப்பட்டு, இருதய மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, 'ஸ்ட்ரெப்டோகைனேஸ்' எனும் ரத்த உறைதலை தடுக்கும் மருந்து செலுத்தி, நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது.காலில் ரத்தக்குழாய் அடைப்புக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை. மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், ரத்த அழுத்தம் குறைதல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இதனால், 'ஐ.வி.சி., பில்டர்' பொருத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த பிப்., 13ல் பொருத்தப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளார். அதேபோல் மற்றொரு பெண் வனிதா, 64, நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் ரத்த உறைதல் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், 'மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி' சிகிச்சை மேற்கொண்டு ரத்த கட்டி அகற்றப்பட்டது.பின் ரத்த அழுத்தம் சீராகி, நலமுடன், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இச்சிகிச்சை, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த உயரிய சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகளில், 3 முதல், 5 லட்சம் ரூபாய் செலவாகும். இத்தகைய சிகிச்சையை சிறப்பாக மேற்கொண்ட, இருதய துறை மருத்துவர்களுக்கு பாராட்டு.இவ்வாறு அவர் கூறினார்.இருதய துறைத்தலைவர் கண்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.