உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மீது பைக் மோதி விபத்துசர்க்கரை ஆலை செக்யூரிட்டி பலி

மொபட் மீது பைக் மோதி விபத்துசர்க்கரை ஆலை செக்யூரிட்டி பலி

மொபட் மீது பைக் மோதி விபத்துசர்க்கரை ஆலை செக்யூரிட்டி பலிமோகனுார்:மோகனுார் சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் சந்திரன், 55; மோகனுார் சர்க்கரை ஆலையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.இவர், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் படிக்கும் தன் மகள் சத்யபிரியா, 19, என்பவருடன், டி.வி.எஸ்., மொபட்டில், நேற்று காலை, 9:30 மணிக்கு, நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, உப்பாத்துப்பாலம் அருகே, பின்னால், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த சக்திவேல், 31, என்பவர் ஓட்டிவந்த, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக், மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சந்திரனை சேலம் அரசு மருத்துவமனையிலும், அவரது மகள் சத்தியபிரியா மற்றும் சக்திவேல் இருவரையும், நாமக்கல் தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அதில், சந்திரன், நேற்று இரவு, 8:00 மணிக்கு உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை