மேலும் செய்திகள்
947 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
07-Dec-2024
துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்போச்சம்பள்ளி :கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒன்றியம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை கொண்டாடும் வகையில், போச்சம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15 பஞ்.,களில் உள்ள, 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா குள்ளனூரில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தென்னை, மா செடிகள் வழங்கப்பட்டன. தி.மு.க.,- எம்.எல்.ஏ., மதியழகன், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இளையராஜா, சரவணன் உள்ளிட்ட தி.மு.க., கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
07-Dec-2024