மேலும் செய்திகள்
பொங்கல் பரிசு 'டோக்கன்' வீடுதோறும் வினியோகம்
04-Jan-2025
மத்திய சிறையில் கறிக்கோழி விற்பனை மையம் தொடக்கம்சேலம்,: மத்திய சிறை கைதிகள், கறிக்கோழி விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.சிறை கைதிகளுக்கு வாரம் ஒருமுறை, 150 கிராம் சிக்கன் வழங்கப்பட்டது. 2023ல், வாரம் இரு நாட்கள், 300 கிராம் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி புதன், ஞாயிறில் தலா, 150 கிராம் சிக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் வெளியே இருந்து சிக்கன் வாங்குவதால், சிறை செலவு அதிகரித்தது. இதனால் சிறையில் கோழிகளை வளர்க்க, சிறைத்துறை நடவடிக்கை எடுத்தது.அதன்படி சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்பட ஒன்பது மத்திய சிறைகளில் தற்போது கோழிப்பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு பயிற்சி அளித்து கோழிகள் வளர்க்கப்படுகின்றன. சேலம் மத்திய சிறையில், 4,500 கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் விற்பனை மையத்தை, சிறை எஸ்.பி., வினோத், நேற்று தொடங்கி வைத்தார். சிக்கன் கிலோ, 195 ரூபாய், உயிருடன் கோழி, 165 ரூபாய்க்கு விற்பனையானது.இதுகுறித்து எஸ்.பி., வினோத் கூறியதாவது:சிறையில் கோழிகள் சுகாதாரமாக, இயற்கை உணவுகள் வழங்கி தரமாக வளர்க்கப்படுகின்றன. கைதிகளுக்கு வழங்கிய பின் மீதி, மக்களுக்கு விற்கப்படும். மொத்தமாக தேவைப்படுவோர், முன்பதிவு செய்தால் அதற்கேற்ப விற்கப்படும். 24 மணி நேரமும் ஆர்டர் செய்யலாம். தற்போது மத்திய சிறை, பெண்கள் சிறையில் வழங்கி வருகிறோம். விரைவில் குளிர்சாதன பெட்டிகள் வரவழைக்கப்பட்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, கோழிக்கறி விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
04-Jan-2025