உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோட்டார் பழுதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு

மோட்டார் பழுதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு

மோட்டார் பழுதால் குடிநீரின்றி மக்கள் தவிப்புபனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி, மூக்குத்திபாளையம் ஊராட்சி, பசுவநத்தம்பட்டி சாலையில் உள்ள தண்ணி கிணத்துக்காட்டில் சிறு தொட்டி உள்ளது. ஆழ்துளை குழாய் கிணற்றில் தண்ணீர் எடுத்து, அத்தொட்டியில் விட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. மூக்குத்திபாளையம், காட்டுக்கொட்டாய், ஏ.ஆர்.காலனி மக்கள் பயன்படுத்தினர். இரு மாதங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'மின்மோட்டார் பழுதாகியுள்ளது. அதை சரிசெய்ய அனுமதி கேட்டு, அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை