உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோப்பை வென்ற சேலம் அணிக்கு உற்சாக வரவேற்பு

கோப்பை வென்ற சேலம் அணிக்கு உற்சாக வரவேற்பு

கோப்பை வென்ற சேலம் அணிக்கு உற்சாக வரவேற்புசேலம், : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கு, பி.ஆர்., தேவர் கோப்பை கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடந்தது. இதில், பல்வேறு அணிகள் விளையாடின. கடந்த, 29 முதல், 31 வரை நடந்தது.இதன் இறுதிப்போட்டியில், திருவள்ளூவர் அணியை வீழ்த்தி, சேலம் அணி வெற்றி பெற்றது. இக்கோப்பையை, 50 ஆண்டுக்கு பின் சேலம் வென்றதாக, சேலம் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். வெற்றி பெற்ற அணியினர், நேற்று சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.அவர்களை, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் பாபு குமார், இணை செயலர் ராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை