ஒருமையில் பேசியதாக தாசில்தாரை சிறைபிடித்துவி.ஏ.ஓ., சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
ஒருமையில் பேசியதாக தாசில்தாரை சிறைபிடித்துவி.ஏ.ஓ., சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்ஓமலுார்:தாரமங்கலம், பனிக்கனுார் வி.ஏ.ஓ., சரவணன், 40. இவர் எடையப்பட்டியில் பயிர் ஆய்வு செய்தபோது, புறம்போக்கு நிலத்தில் ஒரு வாரமாக பழனிசாமி என்பவர் அனுமதியின்றி பாறைகளுக்கு வெடிவைத்து திருடியது தெரியவந்துள்ளது.நேற்று மீண்டும் கனிமத்தை எடுத்துச்சென்றபோது வாகனத்தை கைப்பற்றிய வி.ஏ.ஓ., சரவணன், தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் சரிதாவிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஓமலுார் தாசில்தார் ரவிக்குமாரிடம் தெரிவித்தபோது, அவர் ஒருமையில் பேசி திட்டியதாக, சரவணன், ஓமலுார் வட்ட வி.ஏ.ஓ., சங்கத்தில் புகார் தெரிவித்தார்.இதையடுத்து, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், 25 பேர், நேற்று இரவு ஓமலுார் தாசில்தார் ரவிக்குமாரை சந்தித்து, சங்க லெட்டர் பேடு மூலம் விளக்கம் கேட்டனர். தொடர்ந்து அனைவரும் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை சிறைபிடித்து, அலுவலக வாயிலில் அமர்ந்து, 7:30 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு, 10:00 மணி வரையும் போராட்டம் தொடர்ந்தது. ஓமலுார் போலீசார் சமாதான பேச்சு நடத்தினர்.