உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் - லாரி மோதல்கல்லுாரி மாணவர் பலி

பைக் - லாரி மோதல்கல்லுாரி மாணவர் பலி

பைக் - லாரி மோதல்கல்லுாரி மாணவர் பலிஇடைப்பாடி:ஓமலுார் அருகே தீவட்டிப்பட்டியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜா, 19. குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், டி.பார்ம் படிக்கிறார். நேற்று வீட்டில் இருந்து, 'டிஸ்கவர்' பைக்கில் கல்லுாரிக்கு புறப்பட்டார். அவருடன் படித்த, புதுப்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவீன், 19, மேட்டூரை சேர்ந்த அன்பழகன் மகன் ஜீவானந்தம், 19, ஆகியோர், கொங்கணாபுரம் அருகே மூலப்பாதையில் காத்திருந்தனர். அங்கு மைக்கேல்ராஜ் சென்றதும், 'நான் ஓட்டுகிறேன்' எனக்கூறி நவீன் பைக்கை வாங்கி, ஹெல்மெட் அணியாமல் ஓட்டினார். மற்ற இருவரும் அமர்ந்து சென்றனர். காலை, 7:00 மணிக்கு கொங்கணாபுரம் அருகே வெட்டுக்காட்டில் சென்றபோது, முன்புறம் சென்ற, டாரஸ் லாரி டிரைவர், பைக்கை முந்த முயன்று, இடதுபுறம் திருப்பினார்.அப்போது பைக் மீது லாரி மோதியதில் தடுமாறி விழுந்த நவீன், சம்பவ இடத்தில் பலியானார். கொங்கணாபுரம் போலீசார், லாரியை விட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ