கொடுக்கல், வாங்கலில் குஸ்திஎஸ்.ஐ., - ஏட்டு இடமாற்றம்
கொடுக்கல், வாங்கலில் 'குஸ்தி'எஸ்.ஐ., - ஏட்டு இடமாற்றம்சேலம்:சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., தமிழ்ராஜ், ஏட்டு பிரேம்நாத் பணியாற்றினர். இன்ஸ்பெக்டர் கூறியதாக, ஏட்டு, 5,000 ரூபாயை, எஸ்.ஐ.,யிடம் வாங்கியுள்ளார். அதில், 4,000 ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி வழங்காமல் காலம் தாழ்த்தினார். இதுகுறித்து, கடந்த, 5ல், எஸ்.ஐ., கேட்க, 'நீதிமன்றம் சென்று வந்ததில் செலவாகிவிட்டது' என, ஏட்டு கூறியுள்ளார். இதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏட்டு சட்டையில் இருந்து, மொபைல் போனை, எஸ்.ஐ., எடுத்துள்ளார். இதில் தகராறாக மாறியது. தொடர்ந்து, எஸ்.ஐ., ஏட்டுவை தாக்கினார். பதிலுக்கு ஏட்டுவும், எஸ்.ஐ.,யை தாக்கினார். பணியில் இருந்த சக போலீசார், சமாதானப்படுத்தினர்.ஸ்டேஷனில் நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்த பின், அங்குள்ள, 'சிசிடிவி' கேமாரவை ஆய்வு செய்தனர். இதையடுத்து, எஸ்.ஐ., தமிழ்ராஜை, கொண்டலாம்பட்டி ஸ்டேஷனுக்கும், ஏட்டு பிரேம்நாத்தை, இரும்பாலை ஸ்டேஷனுக்கும் மாற்றி, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.