பெங்களூரு - சேலம் விமானம் 14 வரை தாமதமாக இயக்கம்
பெங்களூரு - சேலம் விமானம் 14 வரை தாமதமாக இயக்கம்ஓமலுார்: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், இன்று முதல் வரும், 14 வரை, ஏரோ விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் காலை, மதியம், குறிப்பிட்ட சில மணி நேரங்கள், வான் பரப்பு மூடப்படுகிறது.இதன் எதிரொலியாக ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளியில், பெங்களூருவில் இருந்து சேலம் இயக்கப்படும் இண்டிகோ விமானம், அந்நிகழ்ச்சிக்கேற்ப தாமதமாக இயக்கப்படும். அதேபோல் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளியில் சேலத்துக்கு இயக்கப்படும், அலையன்ஸ் ஏர் விமானமும் தாமதமாக இயக்கப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.