எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில்பொங்கல் விழா கொண்டாட்டம்
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில்பொங்கல் விழா கொண்டாட்டம்கருப்பூர், :பொங்கல் பண்டிகையை ஒட்டி, சேலம், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வண்ண கோலமிட்டு அலங்காரம் செய்த பானையில் பொங்கலை வைத்து, அனைவரும் ஒன்றுகூடி, 'பொங்கலோ பொங்கல்' என கூறி கொண்டாடினர். பள்ளி நிர்வாக தலைவர் ஆண்டியப்பன், செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர்செல்வம், நிர்வாக இயக்குனர்கள், எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலை, பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முடிவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.