உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சூரிய ஒளி விழும் நிகழ்வுபக்தர்கள் ஏமாற்றம்

சூரிய ஒளி விழும் நிகழ்வுபக்தர்கள் ஏமாற்றம்

சூரிய ஒளி விழும் நிகழ்வுபக்தர்கள் ஏமாற்றம்தாரமங்கலம்:தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மேற்கு புற வாசல் கொண்டது. அங்கு நேற்று, இன்று, நாளை, கைலாசநாதர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, நேற்று காத்திருத்தனர். ஆனால் சிலர் அரிய நிகழ்வை காணும் ஆர்வத்தில் கொடி மரம், நந்தி மண்டபம் முன் கூட்டமாக நின்று, சூரியன் உள்ளே செல்வதை மறைத்துவிட்டனர். இதனால் சூரிய ஒளி விழும் நிகழ்வை காண முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் இன்று, நாளை சூரிய ஒளியை காண, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ