உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேச்சேரியை தனி தாலுகாவாக பிரிக்கமுதல்வரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை

மேச்சேரியை தனி தாலுகாவாக பிரிக்கமுதல்வரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை

மேச்சேரியை தனி தாலுகாவாக பிரிக்கமுதல்வரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கைமேட்டூர்:பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அளித்த மனு:மேட்டூர் சட்டசபை தொகுதியில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள், பட்டா இல்லாமல் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனை நிர்வாக வசதி கருதி காமனேரியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். மேச்சேரி ஒன்றியம் பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம், கூணாண்டியூர், கோனுார் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும். மேட்டூர் தாலுகாவில் உள்ள மேச்சேரியை, தனி தாலுகாவாக பிரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார். அதை பெற்றுக்கொண்ட முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ