உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முறையற்ற இணைப்பால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு

முறையற்ற இணைப்பால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதுார் ஊராட்சி மாரியம்மன் கோவில் அருகே, 1999 - 2000ம் ஆண்டில் புளோரைடு இருப்-பாளி திட்டத்தில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவில் தொட்டி அமைக்கப்பட்டு செல்லக்குட்டிவளவு, முங்கிலிகாடு, காந்தி நகர், ஐயனேரி, பாப்பாங்காடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 550 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இரு வாரங்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டு அப்ப-குதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அ.புதுார் கவுன்சிலர் மணி கூறியதாவது:பட்டணாபட்டி மக்கள், அதிகாரிகள் அனுமதியின்றி தலா, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 3 மினி தொட்டி அமைத்து குடிநீர் பெற்று வருகின்றனர். இதனால் செல்லக்குட்டிவளவு, முங்கிலிகாடு, ஐயனேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, இரு வாரங்களாக நீரேற்றம் இல்லை. மக்கள், 2 கி.மீ., சென்று அ.புதுாரில் உள்ள தனியார் தோட்டங்-களில் குடிநீர் பெறும் அவலம் உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை. முறையற்ற குடிநீர் வினியோகத்தை தடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இருப்பாளி கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் காயத்ரி-தேவி கூறுகையில், ''முறையற்ற குடிநீர் இணைப்பு குறித்து ஏற்க-னவே போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்தோம். தற்போது குடிநீர் வினியோகம் தடைபட்ட பகுதிக்கு மீண்டும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ