ஆலை மூடலை கைவிடஊழியர்கள் உண்ணாவிரதம்
ஆலை மூடலை கைவிடஊழியர்கள் உண்ணாவிரதம்சேலம்,:சேலம், புது ரோட்டில் உள்ள, தனியார் எலக்ட்ரானிக் நிர்வாக ஊழியர்கள், கோட்டை மைதானத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அண்ணா தொழிற்சங்க துணை செயலர் ஷபி தலைமை வகித்தார். தலேமா கிளை ஐ.என்.டி.யு.சி., தலைவர் நடேசன், தொடங்கி வைத்தார்.அதில், நிறுவனத்தில் நிறுத்தி வைத்துள்ள சலுகைகளை வழங்குதல்; ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தீர்வு காணுதல்; 500 தொழிலாளர்கள் குடும்பம் பாதிக்கும் ஆட்கள் குறைப்பு மற்றும் ஆலையை மூடும் நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.