உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சர்க்கரை மிட்டாய் விற்பனை அமோகம்

சர்க்கரை மிட்டாய் விற்பனை அமோகம்

சர்க்கரை மிட்டாய் விற்பனை அமோகம்வீரபாண்டி:சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு, 50க்கும் மேற்பட்ட சர்க்கரை மிட்டாய் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடிந்து திரும்பும்போது பக்தர்கள் தவறாமல் மிட்டாய்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் மிட்டாய் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வியாபாரி கந்தசாமி, 60, கூறியதாவது:இடைப்பாடி, சங்ககிரி சுற்றுவட்டாரங்களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக சர்க்கரை மிட்டாய்களை தயாரித்து வருகிறோம். சுற்றுவட்டாரங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களில், கடைகள் போட்டு விற்கிறோம். 5 ஆண்டுக்கு முன் வரை, இதே மிட்டாய்களில் கோபுரம், யானை, குதிரை, ஆண், பெண் உருவம் என அச்சுகளில் செய்து பல வண்ணங்களில் விற்றோம். விலையேற்றத்தால் தற்போது பர்பி போன்ற செவ்வக வடிவில் மட்டும் தயாரித்து, கிலோ, 240 ரூபாய்க்கு விற்கிறோம். பன்னாட்டு சாக்லெட்கள் பல விற்பனைக்கு வந்தாலும், சர்க்கரை மிட்டாய்க்கு எப்போதும் வரவேற்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை