உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வடமாநிலங்களுக்கு வெண்ணெய்தென்மாநிலங்களுக்கு சுண்ணாம்பு

வடமாநிலங்களுக்கு வெண்ணெய்தென்மாநிலங்களுக்கு சுண்ணாம்பு

'வடமாநிலங்களுக்கு வெண்ணெய்தென்மாநிலங்களுக்கு சுண்ணாம்பு'ஓமலுார்:தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்டம் ஓமலுாரில், மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:மக்கள் தொகை எண்ணிக்கையில், வடமாநிலங்களில் அதிக லோக்சபா தொகுதியை ஏற்படுத்தியும், தென் மாநிலங்களில் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தில் மத்திய அரசு செயல்பட்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைகிறது. நிதி வழங்குவதிலும், வடமாநிலங்களுக்கு வெண்ணெய், தென்மாநிலங்களுக்கு சுண்ணாம்பை வைத்து, மோடி அரசு வஞ்சிக்கிறது. மும்மொழி கொள்கையை எதிர்த்து போராடும் தமிழக முதல்வருக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.செய்தி தொடர்பு குழு இணை செயலர் ஜெயராஜ், ஓமலுார் ஒன்றிய செயலர்கள் செல்வகுமரன், பாலசுப்ரமணி, காடையாம்பட்டி அறிவழகன், ரவிச்சந்திரன், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி