மேலும் செய்திகள்
மதுரை -- கோவை பறந்த 'இதயம்'
27-Feb-2025
இதயம் பலவீனத்தால் இறப்புமேஸ்திரி விவகாரத்தில் திருப்பம்மல்லுார்:மல்லுார் அருகே அம்மாபாளையம், சிங்காரத்தோப்பை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணிவேல், 40. நேற்று முன்தினம், 'போதை'யில் குடும்ப பிரச்னையில் மனைவி,மாமியார், உறவினரை கத்தியால் வெட்டி விட்டு தனியார் பஸ்சில் ஏறி தப்ப முயன்றார். உறவினர்கள், இருசக்கர வாகனத்தில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர். மல்லுார் அருகே பஸ்சில் இருந்து இறங்கிய மணிவேல், மயங்கி விழுந்து உயிரிழந்தார். அடித்துக்கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால், மல்லுார் போலீசார், சந்தேக மரண வழக்குப்பதிந்து விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மணிவேல் இதயம் மிக பலவீனமாகவும், வழக்கத்தை விட சுருங்கி இருந்ததாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. பதற்றத்தால் இறப்பு நேரிட்டிருக்கலாம். அவரது இதயம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின் சட்டப்பிரிவுகளில் மாற்றம் செய்து, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
27-Feb-2025