உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு1,100 வாகனங்களில் செல்ல பா.ம.க., ஏற்பாடு மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு1,100 வாகனங்களில் செல்ல பா.ம.க., ஏற்பாடு

மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு1,100 வாகனங்களில் செல்ல பா.ம.க., ஏற்பாடு மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு1,100 வாகனங்களில் செல்ல பா.ம.க., ஏற்பாடு

மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு1,100 வாகனங்களில் செல்ல பா.ம.க., ஏற்பாடுசேலம்:மாமல்லபுரத்தில் மே, 11ல் பா.ம.க., - வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, சேலத்தில், மாநகர் மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் தலைமை வகித்தார்.அதில் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், சேலம் மாநாட்டு குழு பொறுப்பாளரான, முன்னாள் எம்.எல்.ஏ., இளவழகன் பேசினர். அப்போது, சேலம் மாவட்டத்தில் இருந்து, 1,000 வாகனங்களில் சென்று, பா.ம.க.,வினர் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பங்கேற்க கேட்டுக்கொண்டனர். வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்தி, பசுமை தாயக மாநில இணை செயலர் சத்ரியசேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல் மேட்டூரில் நடந்த கூட்டத்தில், பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமை வகித்தார். அதில், 100க்கும் மேற்பட்ட வாகனங்களில், 5,000 பேர் மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மேச்சேரி, அமரத்தை சேர்ந்த அசோக், 5,000 பேருக்கு மதியம், இரவு உணவை, சொந்த செலவில் வழங்குவதாக கூறினார். வன்னியர் சங்க நிர்வாகி வாமலை, மாவட்ட செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர், டி - சர்ட் இலவசமாக வழங்குவதாக கூறினர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ