மேலும் செய்திகள்
அரசு மகளிர்கலைக்கல்லுாரியில் மகளிர் தினவிழா
08-Mar-2025
வைகை மகளிர் கல்லுாரியில்8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்வாழப்பாடி:வாழப்பாடி, முத்தம்பட்டியில் உள்ள வைகை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில், 8ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன் பொருளாளர் வீரமணி வரவேற்றார். தலைவர் அய்யாவு முன்னிலை வகித்தார். முதல்வர் அன்பழகன் ஆண்டறிக்கை வாசித்தார். அதில் ஆத்துார் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் செல்வராஜ் பேசினார். தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவியர், விளையாட்டு போட்டிகளில் முதல், 3 இடங்களை பிடித்த மாணவியருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின் மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. செயலர் கணேசன், தமிழ் துறை உதவி பேராசிரியர் சத்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
08-Mar-2025