மேலும் செய்திகள்
தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு
11-Sep-2024
சேலம்: உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மனநல மருத்துவப்பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் மணிகாந்தன்(பொ) தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.அதில் செவிலியர், பள்ளி மாணவ மாணவியர், மருத்துவ மாண-வர்கள் உட்பட பலர், விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி, மருத்துவமனை வளாகம் முழுதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு கையேடுகள் வினியோகிக்கப்பட்டன. மேலும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்-டன.மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், மனநலத்துறை தலைவர் ரவிசங்கர் உள்ளிட்ட மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Sep-2024