உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நூலகத்தை முறையாக பராமரிக்க அறிவுரை

நூலகத்தை முறையாக பராமரிக்க அறிவுரை

தாரமங்கலம், தாரமங்கலம் நகராட்சி, 13வது வார்டில் அறிவுசார் மையம், நுாலகம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அங்கு கலெக்டர் பிருந்தா தேவி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, புத்தகங்கள் முறையாக அடுக்கி வைக்கப்படாததோடு, இருக்கைகள் சரியாக இல்லை. இதனால் நுாலகத்தை முறையாக பராமரிக்க, கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதி மக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்தும், குப்பை தரம் பிரித்து வாங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். தொடர்ந்து காலை உணவு திட்ட பணியை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்