மேலும் செய்திகள்
காதல் ஜோடி தஞ்சம்
10-Jan-2025
காதல் ஜோடிபோலீசில் தஞ்சம்ஆத்துார்:கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியை சேர்ந்தவர் கார்த்தி, 33. தையல் தொழில் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் பூவரசி, 24. இருவரும் காதலித்த நிலையில், இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், சீலியம்பட்டி விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். பூவரசியின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் கார்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.
10-Jan-2025