உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெண்ணந்துார் போலீசார்காவல் செயலி விழிப்புணர்வு

வெண்ணந்துார் போலீசார்காவல் செயலி விழிப்புணர்வு

வெண்ணந்துார் போலீசார்'காவல் செயலி' விழிப்புணர்வுவெண்ணந்துார்:தமிழக போலீசார் சார்பில், பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் தங்களுடைய புகார்களை, மொபைல் போன் மூலம் உடனுக்குடன் போலீசாருக்கு தெரிவிக்க ஏதுவாக, 'காவல் உதவி செயலி' அறிமுகப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று, வெண்ணந்துார் போலீசார் சார்பில், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் கார்மென்ட்ஸில், 'காவல் உதவி செயலி' குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் சுகவனம் பேசுகையில், ''ஏதேனும் அவசரநிலை அல்லது பாதுகாப்பு தேவைப்பட்டால், இந்த செயலியை பயன்படுத்தி பெண்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். காவல் துறையின், 14 சேவைகள் இந்த செயலியில் கிடைக்கின்றன. இதுகுறித்து, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் தெரியப்படுத்துங்கள்,'' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 400க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !