மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்நலத்திட்ட உதவி வழங்கல்
10-Mar-2025
'மக்களுக்கு உதவும் அரசாகதி.மு.க., செயல்படுகிறது'சேலம்:முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்தநாளை ஒட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, சேலம், அம்மாபேட்டையில் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், மாநகர் செயலர் ரகுபதி வரவேற்றார். மத்திய மாவட்ட செயலரும், அமைச்சருமான ராஜேந்திரன் தலைமை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: தெற்கு தொகுதியில் மட்டும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, 17,463 பேருக்கு பரிசு வழங்கப்படுகிறது. மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட, 4 சட்டசபை தொகுதிகளில், 47,000 பேர், பரிசு பெறுகின்றனர். விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பெண்கள் உள்பட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்படும். முதல்வர் மீது பெண்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்கு உதவி செய்யும் அரசாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.தேர்தல் பொறுப்பாளர்கள் இளங்கோவன், சுகவனம் உள்பட, தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
10-Mar-2025