உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் குளித்தகல்லுாரி மாணவர் பலி

கிணற்றில் குளித்தகல்லுாரி மாணவர் பலி

கிணற்றில் குளித்தகல்லுாரி மாணவர் பலிஇடைப்பாடி:கருமந்துறை, கூலாங்குறிச்சியை சேர்ந்த, லட்சுமணன் மகன் அஜித், 21. இடைப்பாடி அரசு கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கோனமோரியில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று பருவத்தேர்வு எழுதிய அஜீத், நண்பர்களுடன், மதியம், 2:30 மணிக்கு, பயன்பாட்டில் இல்லாத கல்குவாரியில் உள்ள கிணற்றுக்கு சென்று துணி துவைத்தார். தொடர்ந்து குளிக்க இறங்கினார். நீச்சல் தெரியாத அவர் மூழ்கிவிட்டார். நண்பர்கள், அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் தேடி, அஜித்தை மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அஜித் இறந்தது தெரியவந்தது. கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !