உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

ஏற்காடு :ஏற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில் அலுவலர்கள், அங்குள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, 'விபத்தில்லா தீபாவளி' கொண்டாடுவது குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும்; பட்டாசு வெடித்து ஆடையில் தீப்பிடித்தால் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என விளக்கம் அளித்தனர். அதேபோல் ஓமலுார் தீயணைப்பு துறை சார்பில், நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள், பெரமெச்சூர் அரசு பள்ளியில் செயல் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை