மேட்டூர் அணை உபரிநீர் போக்கியில்2 மதகுகளில் சாரங்கள் அமைப்பு
மேட்டூர் அணை உபரிநீர் போக்கியில்2 மதகுகளில் சாரங்கள் அமைப்புமேட்டூர்:மேட்டூர் அணை, 1925ல் தொடங்கி, 1934ல் கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டி, 90 ஆண்டான நிலையில், இன்னமும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அணை நிரம்பிய பின், 16 கண் மதகு உபரிநீர் போக்கி வழியாக அதிகபட்சம், 3.56 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்ற முடியும். அதற்கு மதகுகளில், கல்துாண்கள் இடையே தலா, 20 அடி உயரம், 60 அடி நீளம், 52.25 டன்னில், 16 ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணை, 16 கண் மதகில் ஷட்டர்களை தாங்கி நிற்கும் கல்துாண்கள் வலுவாக உள்ளதா என, கடந்த பிப்., 13ல், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் அழகுசுந்தர மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது, கல்துாண்களை வலுப்படுத்த, பொறியாளர் குழுவுக்கு சில ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து முதல்கட்டமாக, உபரிநீர் போக்கியில், 1, 2 ஆகிய இரு மதகுகளில் கம்பிகள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு மீண்டும் பேராசிரியர் ஆய்வு செய்து, அடுத்த கட்ட பணி தொடங்கும் என, அணை பொறியாளர்கள் தெரிவித்தனர்.