இன்ஸ்பெக்டரைதாக்கிய 2 பேர் கைது
இன்ஸ்பெக்டரைதாக்கிய 2 பேர் கைதுசேலம், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே, போக்குவரத்துக்கு இடையூறாக பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ரோந்து வந்த, வடக்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், 'மைக்' மூலம், பைக்கை எடுக்க அறிவுறுத்தினார். சிறிது நேரத்துக்கு பின், 2 பேர் பைக்கை எடுக்க வந்தனர். அப்போது, 'எதற்காக இப்படி பைக்கை நிறுத்தி விட்டு செல்கிறீர்கள்' என கேட்டு, வழக்குப்பதிய முயன்று, இன்ஸ்பெக்டர் பைக்கை எடுக்க முயன்றார். அதற்கு அந்த இருவரும் தடுத்து தகராறு செய்ததோடு, இன்ஸ்பெக்டரை தாக்கினர். பின் பள்ளப்பட்டி போலீசார் வந்து விசாரித்ததில், பள்ளப்பட்டி, சினிமா நகரை சேர்ந்த மணிகண்டன், 31, மேட்டூரை சேர்ந்த சதீஷ், 27, ஆகியோர், 'குடி'போதையில் இன்ஸ்பெக்டரை தாக்கியது தெரிந்தது. இதனால் போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.