உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லுாரியில் சதுரங்க போட்டி

ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லுாரியில் சதுரங்க போட்டி

சேலம்: சேலம், நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்-லுாரியில், பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லுாரிகளுக்கிடையேயான, சதுரங்க போட்டி நடைபெற்றது.ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் புகழ்செல்-வராஜ் வரவேற்று பேசினார். போட்டியை, ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசெட்டி தொடங்கி வைத்தார். செயலர் ராமசாமி, கல்லுாரி செயலர் நடராஜன், பெரியார் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்-குனர் முனைவர் வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.ஸ்ரீ வித்யா மந்திர் கல்லுாரியின் முதல்வர் முனைவர் தனலட்சுமி வாழ்த்தி பேசினார். ஆண்களுக்கான சதுரங்க போட்டியை முனைவர் சுரேஷ்குமார், உடற்கல்வி இயக்-குனர் ஏ.வி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சேலம், பெண்களுக்கான சதுரங்க போட்டியை முனைவர் கோபிகா உடற்கல்வி இயக்குநர் என்.கே.ஆர்., மகளிர் கல்லுாரி நாமக்கல், ஒருங்கிணைந்து நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை