உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடியில் திட்டப்பணி இ.பி.எஸ்., துவக்கி வைப்பு

இடைப்பாடியில் திட்டப்பணி இ.பி.எஸ்., துவக்கி வைப்பு

இடைப்பாடியில் திட்டப்பணிஇ.பி.எஸ்., துவக்கி வைப்புஇடைப்பாடி, செப். 14-இடைப்பாடி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 7.83 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள், புது திட்டப்பணிகள் தொடக்க விழா, இடைப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள் தலைமை வகித்தார்.அதில் அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், ''இடைப்பாடி சட்டசபை தொகுதியில அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர், சாலை வசதிகள், கல்லுாரி, மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்,'' என்றார்.ஒன்றிய செயலர் மாதேஸ், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி, நகர செயலர் முருகன், நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி