உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓராண்டுக்கு வழங்க வேண்டிய நீரை மூன்று மாதங்களில் வழங்கிய கர்நாடகா

ஓராண்டுக்கு வழங்க வேண்டிய நீரை மூன்று மாதங்களில் வழங்கிய கர்நாடகா

மேட்டூர்: கர்நாடகா, தமிழகத்துக்கு ஓராண்டுக்கு வழங்க வேண்டிய நீரை, கடந்த மூன்று மாதங்களில் வழங்கியுள்ளது.கடந்த, 2018 பிப்., 16ல் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கர்நாடகா ஆண்டுதோறும் ஜூன் முதல் மறு ஆண்டு மே மாதம் வரை, 177.25 டி.எம்.சி., நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இதில் ஜூனில், 9.19, ஜூலை, 31.24, ஆகஸ்ட், 45.95, செப்டம்பர், 36.76, அக்டோபர், 20.22, நவம்பர், 13.78, டிசம்பர், 7.35, ஜனவரி, 2.76, பிப்ரவரி முதல், மே வரை தலா, 2.50 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும்.கடந்த ஜூனில், கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையில் ஜூன் மாதம், 2.25 டி.எம்.சி., நீர் மட்டுமே, கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது.இந்நிலையில், கர்நாடகாவின் காவிரி நீர்பி-டிப்பு பகுதியில் ஜூலை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அணைகள் நிரம்-பியது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ்., அணை-களில் இருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. கடந்த ஜூலையில், 96.50, ஆகஸ்டில், 78, என கடந்த மூன்று மாதங்களில், 176.75 டி.எம்.சி., நீர் மேட்டூர் அணைக்கு வழங்கி-யுள்ளது. கடந்த, 1 முதல், 3 வரை, 2 டி.எம்.சி.,க்கும் கூடுதலான நீர் வழங்கியுள்ளது. அதனை கணக்கிடுகையில், 2024-25ல் ஜூன் முதல் மே வரை வழங்க வேண்டிய நீரை, கர்-நாடகா கடந்த மூன்று மாதங்களில் வழங்கி விட்டது. இதில், 49 டி.எம்.சி., நீர் உபரியாக மேட்டூர் அணை, 16 கண் மதகு வழியாக வெளி-யேற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை