மேலும் செய்திகள்
பைக்குகள் மோதல் வாலிபர் உயிரிழப்பு
15-Mar-2025
ஆசிட் குடித்தவர் உயிரிழப்புசேலம்:சேலம், சன்னியாசிகுண்டு, சின்னசாமி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 27. வெள்ளி தொழிலாளி. இவரது மனைவி மாலினி, 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட, மாலினி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இரு மாதங்களாகியும் திரும்பி வரவில்லை. இதில் விரக்தி அடைந்த மோகன்ராஜ், நேற்று முன்தினம், வெள்ளிக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் இறந்து விட்டது தெரிந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Mar-2025