மேலும் செய்திகள்
டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு
20-Mar-2025
ஊரைவிட்டு ஒதுக்கிவைப்புடி.எஸ்.பி., விசாரணைஆத்துார்:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சமலை அடிவாரம் நரிப்பாடியில், மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்கு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.அதன் அருகே, செல்வக்குமார் என்பவரது நிலம் உள்ளது. அதில் குறிப்பிட்ட நிலத்தை, கோவிலுக்கு வழங்க, ஊர் முக்கிய பிரமுகர்கள் கேட்டனர். செல்வகுமார் மறுத்துவிட்டார். இதனால் அவரை குடும்பத்தினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் செல்வக்குமாரின் அக்கா ராஜம்மாளின் கணவர், கடந்த அக்டோபரில் உயிரிழந்தார். அப்போது அங்கு செல்வக்குமார் சென்றதால், ராஜம்மாளின் குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்து ராஜம்மாள், செல்வக்குமார், கடந்த, 1ல், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனால் நேற்று முன்தினம் இருவரையும் அழைத்து, கெங்கவல்லி போலீசார் விசாரித்தனர்.தொடர்ந்து செல்வக்குமார், ராஜம்மாள் குடும்பத்தினர், ஊர் முக்கிய பிரமுகர்கள், ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராக, போலீசார் தெரிவித்தனர். அதன்படி அனைவரும் நேற்று வந்தனர். டி.எஸ்.பி., சதீஷ்குமார், இரு தரப்பினரிடமும் விசாரித்தார்.
20-Mar-2025