உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தந்தையை வெட்டிய மகன்

தந்தையை வெட்டிய மகன்

தந்தையை வெட்டிய மகன்மேட்டூர்:மேட்டூர், சாம்பள்ளி ஊராட்சி கோம்பைகாட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி, 70. கால்நடைகள் வளர்க்கிறார். அவரது பாதுகாப்புக்கு, இடுப்பில் ஒரு அரிவாள் வைத்திருப்பார். அவரது மகன் சங்கர், 30. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த, 3 காலை, 10:00 மணிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வதற்கு, பொன்னுசாமி அரிவாளை தேடினார். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த சங்கர், மறைத்து வைத்திருந்த அரிவாளால், தந்தையை வெட்ட முயன்றார். பொன்னுசாமி தடுத்த நிலையில், கையில் வெட்டு விழுந்தது. அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ