மேலும் செய்திகள்
வீடெங்கும் உலாவும் பறவை; மனம் துழாவும் இந்த உறவை
05-Apr-2025
சேலத்துக்கான பறவைதேர்ந்தெடுக்க அழைப்புசேலம்:சேலம் வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி அறிக்கை:சேலம், ஆத்துார் வன கோட்டம், பறவையியல் கழகம் இணைந்து, சேலத்துக்கான பறவையை தேர்வு செய்ய, மக்கள் அனைவரையும் அழைக்கிறோம். நம் சேலம் பறவையை தேர்ந்தெடுக்கும் இந்நிகழ்வு, பல்லுயிர் பாதுகாப்பு, பறவையியல் சார்ந்த ஆர்வத்தை துாண்டுவது, வன உயிரின குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்படுகிறது.இதற்கு கருந்தோள் பருந்து, பவளக்கால் உள்ளான், செம்மார்பு குக்குறுவான், இந்திய பாம்புத்தாரா, காட்டு பாம்புக்கழுகு, ஆற்று ஆலா, சோலைப்பாடி ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் ஒன்றை, https://birdofsalem.tnfdsutrula.comஎன்ற இணையவழி மூலம் மக்கள் தேர்வு செய்யலாம். இல்லை எனில் கலெக்டர் அலுவலகம், ஏற்காடு அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்துார் அருகே ஆணைவாரி முட்டல், மேட்டூர் அணை பூங்கா ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில், விருப்ப பறவை பெயரை தேர்வு செய்து போடலாம். வரும், 30 வரை தேர்வை பதிவு செய்யலாம். இதற்கான முடிவு, மே, 4ல் வெளியிடப்படும்.
05-Apr-2025