உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிடிவாரன்ட்: 2 பேர் கைது

பிடிவாரன்ட்: 2 பேர் கைது

பிடிவாரன்ட்: 2 பேர் கைதுசேலம்:சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் வினித், 23. இவர் மீது கடந்த ஆண்டு ஆக., 23ல், சூரமங்கலம் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிந்த நிலையில் தலைமறைவானார். அவரை கைது செய்து ஆஜர்படுத்த, நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் துாத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் இருந்த வினித்தை, நேற்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.அதேபோல் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சக்திவேல், 23. இவர் மீது கடந்த டிச., 12ல், திருட்டு வழக்குபதிந்து, அம்மாபேட்டை போலீசார் தேடினர். பின் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், நேற்று சக்திவேல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி