உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 25 சதவீத வேட்டி, சேலை வினியோகம்வாழப்பாடி ரேஷன் நுகர்வோர் ஏமாற்றம்

25 சதவீத வேட்டி, சேலை வினியோகம்வாழப்பாடி ரேஷன் நுகர்வோர் ஏமாற்றம்

வாழப்பாடி,:வாழப்பாடி தாலுகாவில், பொங்கல் பரிசுத்தொகுப்பு நேற்று முன்தினம் முதல், அனைத்து ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. இதனால் வாழப்பாடி தாலுகா மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து வாழப்பாடி கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்த இல்லத்தரசி கோ.பாக்கியம், 60, கூறுகையில், ''அரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டன. வேட்டி, சேலை வழங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் முறையான அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது,'' என்றார்.வாழப்பாடி, கிழக்குக்காட்டை சேர்ந்த விவசாயி கு.பொன்னுசாமி, 65, கூறுகையில், ''அ.வாழப்பாடி ரேஷன் கடையில் வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. உடனே வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இதுகுறித்து வட்டார வழங்கல் அலுவலர் ரேவதி கூறுகையில், ''வாழப்பாடி தாலுகாவில் உள்ள, 104 ரேஷன் கடைகளில், 60,144 அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க, 14,000 வேட்டி, சேலைகள் மட்டும் வந்த நிலையில், 51 கடைகளுக்கு வழங்கியுள்ளோம். மீதி, 53 கடைகளுக்கு வேட்டி, சேலை வந்ததும் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !