மேலும் செய்திகள்
செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்
25-Mar-2025
மர்ம விலங்கு கடித்து3 செம்மறி ஆடு பலிஜலகண்டாபுரம்:மர்ம விலங்கு கடித்து, மூன்று செம்மறி ஆடுகள் பலியானது.ஜலகண்டாபுரம் அருகே, ஆவடத்துார் பெத்தான்வளவு பகுதியை சேர்ந்தவர் அய்யன்துரை, 60, விவசாயி. இவர் ஏழு செம்மறி ஆடுகளை, வீட்டின் அருகே பாதுகாப்பான முறையில் பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஆடுகளை, பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பார்த்தபோது, பட்டியில் இருந்த மூன்று செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கடித்து, குடல் சரிந்த நிலையில் கிடந்தது.இது குறித்து வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் அய்யன்துரை தகவல் அளித்தார். கால்நடை மருத்துவர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஆவடத்துார் கரடு பகுதியிலிருந்து, இரை தேடி வரும் மர்ம விலங்குகளால், அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
25-Mar-2025