விவசாய உபகரணம்50 பேருக்கு வழங்கல்
விவசாய உபகரணம்50 பேருக்கு வழங்கல்சேலம் :உழவர் திருநாளையொட்டி, சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தை யில், 'சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட்' சார்பில் விவசாயிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், 50 விவசாயிகளுக்கு, கதிர் அரிவாள், மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார். அனைத்து உழவர் சந்தை விவசாயி சங்க ஒருங்கிணைப்பு குழுவின் சேலம் தலைவர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.