உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்பேத்கர் நினைவு தினம்: கட்சியினர் மரியாதை

அம்பேத்கர் நினைவு தினம்: கட்சியினர் மரியாதை

சேலம்: அம்பேத்கரின், 68வது நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்ட மைய நுாலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு, நேற்று, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிருந்தாதேவி மாலை அணிவித்தார். தி.மு.க., சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாலை அணிவித்தார். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலை-மையில் முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் யாத-வமூர்த்தி, செல்வராஜ், அஸ்தம்பட்டி பகுதி செயலர்கள் சர-வணன், முருகன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.பா.ஜ., சார்பில் மாநகர், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் உள்ளிட்டோரும், பா.ம.க.,வில், எம்.எல்.ஏ., அருள், மாவட்ட அமைப்பு செயலர் குமார், துணை செயலர் ராஜமாணிக்கம், மாணவர் சங்க மாவட்ட செயலர் ரஞ்சித் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.த.மா.கா.,வில், மாநகர், மாவட்ட தலைவர் உலகநம்பி, காங்., சார்பில் எஸ்.டி., பிரிவு பொதுச்செயலர் தினகரன், ம.தி.மு.க.,வில், மணிகண்டன், வி.சி.,யில், காஜாமைதீன் உள்பட பல்வேறு கட்-சிகள், அமைப்பினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதேபோல் ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அம்-பேத்கரின் படத்துக்கு, ஆத்துார் வக்கீல் சங்க தலைவர் சிவக்-குமார் தலைமையில் வக்கீல்கள், பூக்கள் துாவி மரியாதை செலுத்தினர்.சங்ககிரியில் வி.சி., நிர்வாகி செஞ்சுடர் தலைமையில் கட்சியினர், அம்பேத்கர் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். இடைப்பாடி அருகே தேவூரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில், மாநில செயலர் பெருமாள் தலைமையில் நிர்வாகிகள், மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ