உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே பாடல் முதல்வருக்கு பொருத்தமாக இருக்கும்

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே பாடல் முதல்வருக்கு பொருத்தமாக இருக்கும்

தலைவாசல்: தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில், அ.தி.மு.க., செயல்வீ-ரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசுகையில், ''வரும், 2026ல் சேலத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதி உள்பட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்று, இ.பி.எஸ்., மீண்டும் முதல்வராக வருவார்,'' என்றார்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என, நீதிபதிகள் கூறுகின்றனர். கூலிப்படை, கொலை போன்-றவை தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர், அமெ-ரிக்காவில் பாட்டு பாடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். முத-லீடுக்கு பதில் ஏமாற்றமே கிடைப்பதால், மன தைரியத்தை ஏற்ப-டுத்த, எம்.ஜி.ஆர்., பாடலை பாடிக்கொண்டிருக்கிறார். 'என்ன தான் நடக்கும்... நடக்கட்டுமே' என்ற பாடல் அவருக்கு பொருத்த-மாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் எம்.எல்.ஏ.,க்களான, கெங்கவல்லி நல்லதம்பி, ஆத்துார் ஜெயசங்கரன், தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.'முடியாட்சிக்கு மகுடம்'அதேபோல் ஆத்துார் நகர அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: மதுரை, சிவகங்கை என, மாவட்டந்தோறும் அமைச்சர் உதயநி-திக்கு பட்டாபிேஷக விழா நடக்கிறது. முடியாட்சிக்கு மகுடம் சூட்டி வருகின்றனர். தமிழகத்தில் ஒரே நாளில் ஆறு கொலைகள் நடந்துள்ளன. போதைப்பொருள் விற்பனை, கடத்தல் அதிகரித்-துள்ளன. இதுகுறித்து, அ.தி.மு.க., தவிர யாரும் பேசுவது கிடை-யாது. 'டாஸ்மாக்' கடையில், 'குடி'மகன்களிடம் தலா, 10 ரூபாய் என, தினமும், 10 கோடி ரூபாய் கொள்ளையடித்து வருகின்றனர்,'' என்றார். இதில் நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை